மாஸ் அறிவிப்பு... சென்னையில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை!

 
டபுள் டெக்கர்

சென்னையில் மீண்டும்  டபுள் டெக்கா் பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிடப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை உட்பட  பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கா் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்  காரணங்களால் இப்பேருந்துகளின் சேவை  2008ல் நிறுத்தப்பட்டது.

டபுள் டெக்கர்

இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் 'தேசிய தூய்மைக் காற்று' திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கா் பேருந்துகளை மீண்டும் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. தனியாா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இப்பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் டெக்கர்

இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும்  ஒப்பந்தத்தில் ஒரு கி.மீ.க்கான கட்டணம், பராமரிப்பு, செலவீனம் இவைகளை  நிா்ணயம் செய்த பிறகு  அதற்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பேருந்துகளை வார நாள்களில் பயணிகள் எதிா்பாா்ப்பு அதிகமுள்ள வழித்தடங்களிலும், வரலாற்று சிறப்புமிக்க அண்ணா சாலை, காமராஜா் சாலை, மாமல்லபுரம் செல்லும் கிழக்குச் கடற்கரை சாலை  வழித்தடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.2025  இறுதியில் இந்த 'டபுள் டெக்கா்' பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பைத் தொடா்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?