மாஸ் காட்டும் தமிழகம்... இன்று முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்கள்!

 
மாணவிகள் அரசு பள்ளி

போதைப் பொருட்களின் புழக்கம்.. வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது என ஒரு பக்கம் அடுத்த தலைமுறை பயமுறுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகம் முன்னேற்ற ப் பாதையில் செல்கிறது. இன்று முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளன.

இன்று ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரத்தையும், கற்றல் திறனையும் அரசுப் பள்ளிகளில் தரவேண்டும் என தமிழக அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வழக்கம் போல் இன்று பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கபப்ட்டுள்ளன.

பள்ளிகள்

பள்ளிகளில் தூய்மைப் பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு,  9ம் வகுப்பு  முதல்  12 ம் வகுப்பு  வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேலையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web