மாஸ் வீடியோ... ‘தக் லைஃப்’குள் நுழைந்த சிம்பு... ரசிகர்கள் உற்சாகம்!

 
தக் லைப்

 தமிழ் சினிமாவில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும், இருந்து வருகிறார். அத்துடன்  பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர்  என பன்முகத்திறமை கொண்டவர். இவர்  நடிப்பில் 2022ல் வெளியான  விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து ஹிட்டடித்து அசத்தியது.


இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகிறார்.  இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துஅன்  ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில்   ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இப்படத்தின்  பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது தக் லைப் படத்தில் சிம்பு எந்த மாதிரியான கேரக்டரில் எந்த மாதிரியான ஒரு தோற்றத்தில் வரப்போகிறார் என்ற ஆர்வம் இருந்து வந்தது.ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்  இன்று வெளியான அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கையில் துப்பாக்கியுடன் சிம்பு  மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார்.  இந்தப் போஸ்டர் பட்டையை கிளப்புகிற மாதிரி வெளியாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web