அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து... பெரும் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கொரிஹான் பகுதியில் 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் இன்று மாலை 3.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
