கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பயங்கர காட்டுத் தீ... மூலிகை செடிகள் கருகிய அவலம்!

 
காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பயங்கர காட்டுத்தீயில் அரிய மூலிகை செடிகளும் கருகி அழிந்தன. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வருகிறது. மே 1ம் தேதி முதல் வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் என்று வெதர்மேன் ஜான் பிரதீப் கூறியுள்ளார்.  இந்த வெயில் காலங்களில் வனப்பகுதிகளில் காய்ந்த சருகுகளால் காட்டுத்தீ உருவாவது வழக்கமானது எனினும், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ பரவல் காரணமாக அரியவகையான மூலிகை செடிகளும் கருகின. 

காட்டுத்தீ

100 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் காட்டுத்தீ திகுதிகுவென பற்றி எரிந்தது. இதனையடுத்து  கொடைக்கானல் வனப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையும்,  வனத்துறையும் ஈடுபட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் சில நாட்களாக நிலவி வந்த கடும் வறட்சி  காரணமாக  காய்ந்த சருகுகளில் தீப்பற்றி அடிக்கடி காட்டுத் தீ உருவாகி வருகிறது. இந்த வனப்பகுதியில்  அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகியுள்ளன. அத்துடன் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு வருவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி  காட்டு மாடுகள், மான்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.  

காட்டுத்தீ
கோடை வெயிலால்  வனப்பகுதியில் உள்ள புல் உட்பட  தாவரங்கள் காய்ந்த நிலையில்  கொடைக்கானல் பூம்பாறை வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி இவைகள்  பற்றி எரிந்தது. இங்குள்ள மரங்கள் , வனவிலங்குகள் காட்டு தீயால் பாதித்தன. தற்போது பூம்பாறை மன்னவனுார் மெயின் ரோட்டில் கூக்கால் பிரிவு இடையே காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. இதன் மத்தியில் பேருந்துகள், சுற்றுலா வந்த  வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றன. வனத்துறையும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும்  நுாற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் எரிந்தன. இந்த காட்டுத்தீயால்  வன விலங்குகள் விளைநிலங்களில் தஞ்சமடைந்து வருகின்றன.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web