செப்டம்பர் 9ல் மொரீசியஸ் பிரதமர் இந்தியா வருகை!

 
மொரீசியஸ் பிரதமர்

மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியா வருகை தர உள்ளார். அதன்படி அவர்  செப்டம்பர்  9 முதல் 16ம் தேதி வரை 8 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இந்த பயணத்தில் குடியரசு தலைவர்  திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை  மேற்கொள்வார். 

இதனையடுத்து  மும்பை, வாரணாசி, அயோத்தியா மற்றும் திருப்பதி செல்கிறார்  என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவும், மொரீசியசும் பகிரப்பட்ட வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள்-மக்கள் பிணைப்புகளில்  நெருங்கிய மற்றும் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதாக  அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

மொரீசியஸ் பிரதமர்

மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் இதற்கு முன் 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார்.  பிரதமராக மோடி 3 வது முறை பதவியேற்றபிறகு  அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணம் இதுவாகும். பிரதமர் மோடி கடந்த மார்ச்சில் மொரீசியசுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், ராம்கூலத்தின் இந்திய பயணம் திட்டமிடப்பட்டது. இதன் மூல இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான பிணைப்புகளை நவீனப்படுத்தும் என கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?