மே 14ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழக அரசு  பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அந்த வகையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை  dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மே 14, 2024 ம் தேதி பார்த்துக் கொள்ளலாம்.   

தேர்வு

தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை TN HSE பிளஸ் 1 முடிவு தளத்தில்  உள்ளீடு செய்ய வேண்டும்.  தேர்வு முடிவு வெளியான பின், துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு வெளியாகும்.

முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.  TN HSE +1 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் தெரியும். இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு அளித்துள்ள மொபைல் எண்களுக்கு நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web