மக்களே உஷார்... மே 20ம் தேதி ரெட் அலெர்ட்... இன்று முதல் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

 
ரெட்

 தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் மே 20ம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று மே 17 முதல்  மே 20ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலும் மே20ம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கேரளாவிற்கும்  சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட், ஆரஞ்சு, மஞ்சள்

அதேபோல் நாளையில் இருந்து மே 21 ம் தேதி வரை கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மே 9ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட தென் மாநிலங்களில்  25.9 செமீ.  மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி, இயல்பிலிருந்து கூடுதலாக 58 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த 7 நாட்களில் இந்தியாவில் 14.1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்தியாவின் ஒட்டுமொத்தமாக இயல்பிலிருந்து 6 சதவீதம் கூடுதல் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!