நாளை ஸ்ரீரங்கம் தேர்திருவிழா... உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் அறிவிப்பு!
நாளை மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறை தவிர்த்து அரசு அலுவலகங்கள் உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களுக்காகவும் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
பூலோக வைகுண்டமாக வைணவ பக்தர்களால் கொண்டாடப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சித்திரை தேரோட்ட விழா நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பதிலாக ஜூன் 29ம் தேதி பணிநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!