ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த மாயாவதி சென்னை வருகை!

 
மாயாவதி

 சென்னை   செம்பியம் பகுதியில் வசித்து வருபவர்  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7 மணிக்கு பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது  6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்ஸ்ட்ராங்


சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில்   ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று சென்னை வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங்


அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, இன்று நேரில் சென்னை வருகை தருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web