இன்று ”மக்களை தேடி மேயர்” தொடக்கம்!! குறைகளை கேட்க வீடு தேடி வந்த மேயர்!!

 
மக்களை தேடி மேயர்

சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்று இருக்கும் பிரியா  மக்களை தேடி மேயர் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். 2023- 24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின் படி மேயர் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனக்குடன் அதனை செயல்படுத்தப்படும். இந்தபுகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என மேயர் பிரியா உறுதி தெரிவித்துள்ளார். 

மக்களை தேடி மேயர்
இந்நிலையில், மக்களை தேடி மேயர்  திட்டத்தின் கீழ் இன்று மேயர் பிரியா, சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். அத்துடன் சென்னை ராயபுரம் மண்டலத்தில் பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிகிறார்.

மேயர் பிரியா

மேலும் இத்திட்டத்தின் படி ராயபுரம் மண்டலத்திற்குட்டவர்கள், மக்களை தேடி மேயர் முகாமில் கலந்து கொண்டு சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்குகள் அமைப்பது, கழிப்பிட வசதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் , சொத்துவரி, தொழில்வரி தொடர்பாக, குப்பைகளை அகற்றுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பூங்கா, விளையாட்டு திடல் என அனைத்து அடிப்படை தேவைகளை குறித்து மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் புகார் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அலைக்கழிப்பதாக கூறி வரும் நிலையில், மக்களை தேடி மேயர் திட்டம் மூலம் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என  மக்களிடையே நம்பிக்கை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web