மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ20000 கோடி குறைவு!!

 
நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி

 
இந்தியாவில் 2017  ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் இருந்து வருகிறது. இதன் படி  மாதத் தொடக்கத்தில் முந்தைய மாத வசூல் தொகை கணக்கிடப்பட்டு நிதி அமைச்சகம் மூலம் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல்  அந்தந்த மாதம் முடிவடைந்ததும் நிதி அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.1.57 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக  நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.  மத்திய அரசின் வரி மூலம் ரூ.28,411 கோடியும், மாநிலங்கள் மூலம் ரூ.35,828 கோடியும் மத்திய, மாநில ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மூலம்  ரூ.81,363 கோடியும், செஸ் வரி மூலம் ரூ. 11,489 கோடியும் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி

இதுவே  ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆன நிலையில், மே மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.57 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.20000 கோடி வரி வசூல் குறைந்துள்ளது. ஆனால், 2022 மே மாதத்தில் வரி வசூலை ஒப்பிட்டு பார்க்கும்போது அதை விட 12 % அதிகமாக இருக்கிறது.

ஜிஎஸ்டி


இதில் மத்திய, மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.81,363 கோடியிலிருந்து மத்திய அரசுக்கு ரூ.35,369 கோடியும், மாநிலங்களுக்கு ரூ.29,769 கோடியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் வரிப் பங்கீட்டுக்குப் பிறகான மத்திய அரசின் வரி வருவாய் ரூ.63,780 கோடியாகவும், மாநிலங்களின் வரி வருவாய் ரூ.65,597 கோடியாகவும் இருந்து வருகிறது

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web