குடிநீரில் மாமிச துகள்கள், முடி, எலும்பு... கலக்கத்தில் பொதுமக்கள்!

 
குடிநீரில் எலும்பு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில்  21 வது வார்டில்  1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இந்த குடியிருப்புக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள்  நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு மிகவும் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததாகக் மக்கள் புகார் அளித்தனர்.  குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி, இறைச்சி, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாகவும் கூறினர். இதனால்  குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பெரும்  அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். 

குடிநீரில் எலும்பு


 குடிநீரில் கலந்து வந்த துர்நாற்றம் காரணமாக குடிநீரைக்குடித்த ஒரு சிலருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது குறித்து உடனடியாக  மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கும் துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று  முடி, இறைச்சி, எலும்பு துண்டுகள் வந்த குடிநீர் குழாயை உடைத்து ஆய்வு செய்தனர். 

சென்னை மக்களே உஷார்!.. நாளை இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை


குடிநீர் வரும் இணைப்பு குழாய் அருகே முடி, இறைச்சி, எலும்பு துண்டுகள் குவிந்து காணப்பட்டது. குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு இந்த பொருள்கள் துகள்களாக கலந்திருக்கலாம் என விளக்கம் அளித்தனர்.  நகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய் அருகே குவிந்து கிடந்த கழிவுகளை அகற்றி  குடிநீர் குழாயை சீரமைத்து  மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தனர். இச்சம்பவம் காரணமாக அந்த வார்டில் உள்ள பொது மக்கள் பெரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web