இயந்திர கோளாறு... சென்னையிலிருந்து 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்!
இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் இருந்து கோலாலம்புருக்கு நான்கு மணி நேரம் தாமதமாக மலேசியன் எர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.
இன்று அதிகாலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிகாலை 12.30 க்கு புறப்படத் தயாரானது. விமானத்தை விமானி இயக்க முயன்ற போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது.
உடனடியாக பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரக் கோளாறை சரிசெய்ய முயன்றனர் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியும் சரிசெய்ய முடியாததால் விமானம் இழுத்து வரப்பட்டு பயணிகள் மற்றும் விமானி பணிப்பெண்கள் உள்பட விமானத்தில் இருந்து 187 பேரும் தரை இறக்கப்பட்டனர்.
பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு பகுதியில் தக்கவைக்கப்பட்டனர். அதிகாலை மூன்றரை மணிக்கு இந்திரக் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் பயணிகளுடன் 3.55மணியளவில் விமானம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. பயணிகள் இரவு 9.30 மணிக்கே விமான நிலையம் வந்த நிலையில் ஏழு மணி நேரம் மிகுந்த சிரமத்துடன் பயணித்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
