40 வயதுக்கு மேல் ஓட்டுனர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம்... அதிரடி உத்தரவு!!

 
ஓட்டுனர் உரிமம்

 தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு மருத்துவ சான்று கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற வேண்டும். அதன் பிறகு தான்  புதிய ஓட்டுநர் உரிமம்  அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும். மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து  பதிவேற்றம் செய்திருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மருத்துவ சான்று

  இதனைத் தடுக்கும் வகையில்  சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உட்பட  அனைத்து விவரங்களையும் ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை  உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனையடுத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு  சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும். மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்து கொண்டாலே  போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே  விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களை  ஆன்லைன் மூலம் மட்டுமே  பதிவேற்றம் செய்ய இயலும், இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது  அங்கீகாரத்திற்கான பதிவுகளை உறுதி செய்வது குறித்து ஜூன் 11ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும்.
அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web