பானிபூரி கடைகளுக்கு பதிவு உரிமம், மருத்துவ சான்று கட்டாயம்!

 
பானிபூரி


சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படங்கள் அதிகரித்து உணவே விஷமாகி பல விபரீதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து உணவகங்களை முறைப்படுத்த தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள், வியாபாரிகளிடம் ஆலோசனைக் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு சில முக்கிய முடிவுகளை செயல்படுத்த உள்ளது.

பானிபூரி

அதன் அடிப்படையில் சென்னையில் பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு, மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல் அவசியம் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

பானிபூரி
இது குறித்து  சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைநியமன அலுவலர் சதீஷ்குமார்  “சென்னை முழுவதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல்,மருத்துவ பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!