ரூ10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு... அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவ காப்பீட்டின் மூலம் அரசு மருத்துவமனைகளில் ரூ5 லட்சம் முதல் ரூ10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டம் 2025 ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!