தொடரும் விபரீதம்... ஆன்லைன் ரம்மியால் மருத்துவ மாணவர் தற்கொலை!

 
தனுஷ்

 ஆன்லைன் ரம்மி விளையாட்டி பணத்தைத் தொலைத்ததுடன் வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் . அரசு இதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போதிலும் உயிரிழப்புக்களை தடுக்க முடியவில்லை. வடசென்னை கொருக்குப்பேட்டை கே.கே.நகரில் வசித்து வருபவர் 23 வயது  தனுஷ் .  இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து  வந்தார். தனுஷ் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் ரம்மியில்  பணத்தை இழந்தாலும்  இழந்த பணத்தை மீண்டும் பெற்றுவிடுவேன் எனப் பிடிவாதமாக தொடர்ந்து  விளையாடி வந்திருக்கிறார் தனுஷ்.  இந்நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் ரூ.24000 பணம் கேட்டுள்ளார். அவரது தந்தை இதற்கு மறுப்பு தெரிவிக்கவே பிறகு ரூ4000 மட்டும் கொடுத்துள்ளார்.  பணத்தை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்ற தனுஷ் கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அவருடைய குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

ஆன்லைன் ரம்மி

இந்த தகவலின் பேரில்  போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.  தனுஷ் உடலை கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து தனுஷின் செல்போனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web