பகீர்... 23 வயசு தான்... தோல் , வாய் , உள்ளுறுப்புக்களில் கொப்புளங்கள்.. .மனச்சோர்வு மருந்தால் கொடூரமான பக்க விளைவு!

 
கிரிமோல்

நியூசிலாந்து நாட்டில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது   மனச்சோர்வுக்காக எடுத்துக் கொண்ட மருந்துகள் தன் உடலை கொஞ்சம் கொஞ்சமாக எரிப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தான்  இறக்கும் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.  
இதுகுறித்து நியூசிலாந்து அவுட்லெட்  ' சார்லோட் கில்மோர், ஸ்டீவன்ஸ்-ஜான்சன் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்  தோல், வாய் மற்றும் உணவுக்குழாயில் கொப்புளங்களை உருவாக்கி அதிகப்படியான வலியை கொடுத்து வருகிறது’ எனத் தெரிவித்தது.    

கிரிமோல்

முதலில் உடலில் காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் தான் தொடங்கியது.  தொடர்ந்து, உடலின் உட்புறத்தின் கொப்புளங்கள் வெடிக்க தொடங்கி பரவி விடும். 19% நோயாளிகளுக்கு பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்கும்.உலக அளவில் ஒரு மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே இந்த பாதிப்புக்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாக  மனச்சோர்வில் இருந்து வெளிவர, லாமோட்ரிஜின் என்ற ஆண்டிபயாட்டிக்  மருந்து கொடுக்கப்படுகிறது. இது ஒரு சில பேருக்கு அரிதாக பக்க விளைவை ஏற்படுத்திவிடும்.  

கிரிமோல்
இந்த பக்கவிளைவு குறித்து  23 வயதான கில்மோர், ' இந்த நோய் என்னை பாதித்தபோது  கண்ணீர் விட்டு கதறி  அழுதேன். இது மிகவும் தீவிரமான நோய்  என்ற பயம் மனதில் உருவாகியது.  இதன் காரணமாக, நேரடியாக மருத்துவமனைக்கு சென்றேன். என்னை சோதித்த மருத்துவ ஊழியர்கள், இது என்ன மாதிரியான பாதிப்பு என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை எனக் கூறிவிட்டனர். இந்த நோய் உடலுக்குள் உள்ளிருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக எரிக்க தொடங்கியது. அதன் தாக்கம் வெளிப்புற தோல்  வாய்  செரிமான அமைப்பு முழுவதும் வலி கொப்புளங்களை ஏற்படுத்திவிட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள் எனக்கு ஊட்டச்சத்துகளை வழங்க உணவுக் குழாயை செலுத்தியுள்ளனர்.
30 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நான் வீடு திரும்பினாலும், அவ்வப்போது இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வருகிறேன். உடல் பற்றி எரிவதைபோல் உள்ளது எனக் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web