140 கோடி மக்களின் வேதனைகளுக்கான ஒரேயொரு மருந்து, சுயசார்பு இந்தியா மட்டுமே... மோடி சூளுரை!
குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்றிருந்தார். மோடி வாகன பேரணியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரூ.34,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் உலகில் நமக்கு பெரிய எதிரி யாரும் கிடையாது. நாம் பிற நாடுகளை சார்ந்து இருப்பதே நம்முடைய பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் இந்த எதிரியை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கான நிலையான மற்றும் வளம் வாய்ந்த எதிர்காலம் உறுதி செய்யப்படுவதற்கு, வெளிநாடுகளை பெரிய அளவில் நாம் சார்ந்திருக்க கூடாது என வலியுறுத்தினார். உலகின் மிக பெரிய மக்கள் தொகை கொண்ட நாம் ஆத்மநிர்பார் (சுயசார்பு) ஆக மாற வேண்டும். 140 கோடி மக்களின் வேதனைகளுக்கான ஒரேயொரு மருந்து, சுயசார்பு இந்தியா என்பதே ஆகும் என கூறினார். சிப்புகள் (அரை கடத்திகள்) முதல் ஷிப்புகள் (கப்பல்கள்) வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும்.

உலக அளவில் பொருட்களை கொண்டு செல்ல ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் கோடியை இந்தியா கொடுக்கிறது.
இந்த தொகை ராணுவ பட்ஜெட்டுக்கு சமம். அதனால், பெரிய கப்பல்களை நாட்டின் உட்கட்டமைப்புகளாக கொண்டு, இந்திய கடல்வழி துறையை பலப்படுத்தும் வரலாற்று முடிவை தன்னுடைய அரசு எடுத்திருப்பதாக பேசியுள்ளார். இந்தியாவிடம் இளைஞர் சக்திக்கு குறைவில்லை. ஆனால், சுதந்திரத்திற்கு பின்னர், இந்தியாவின் அனைத்து சக்திகளையும் காங்கிரஸ் புறந்தள்ளி விட்டது. கோடிக்கணக்கான மதிப்பில் ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் அரசின் கொள்கைகளால், நாட்டின் இளைஞர்களுக்கு பெரிய அளவில் தீங்கு ஏற்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
