சர்வதேச விண்வெளி நிலையத்தை அழிக்க மெகா திட்டம்.. எலான் மஸ்க்குடன் கைகோர்த்த நாசா!

 
 எலான் மஸ்க்

பூமிக்கு மேலே சுமார் 400 கி.மீ., தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வருகிறது. இது சுமார் 90 நிமிடங்களில் பூமியை முழுமையாக சுற்றிவிடும். அதாவது ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. சில சமயங்களில், பூமியில் இருந்து பலர் ஒரு சிறிய ஒளி புள்ளி வானத்தில் வேகமாக நகர்வதைக் பார்த்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன், சென்னையில் இருந்து பார்த்த போது விண்வெளி நிலையம்  தெரிந்தது. விண்வெளியில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் பணிகள், 1998ல் துவங்கியது.2000ம் ஆண்டு முதல், விண்வெளி வீரர்கள் செயல்பட துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் பங்கேற்கிறது. இதன் எடை சுமார் 4.3 லட்சம் கிலோ என கூறப்படுகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையம் தற்போது பூமியை கச்சிதமாகவும், குறைபாடுகள் இன்றியும் சுற்றி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் ஆயுட்காலம் முடிவடையும் என்பதால், அதை அழித்து, உலகின் மிக ஆழமான பசிபிக் பெருங்கடலில் விழ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க்

இதற்கான பொறுப்பை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் விண்கலத்தை அழிக்க ஸ்பேக்ஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 843 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சர்வதேச விண்வெளி நிலையம் நல்ல நிலையில் இருந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்ல நடைமுறை. ஏனெனில், திடீரென பூமியில் விழுந்தால், மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web