21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல் நல்லடக்கம்!

 
செல்வராஜ்

 நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினர் செல்வராஜ் காலமானார். இவர் கடந்த  3ம் தேதி  உடல்நலக் குறைவு காரணமாக  சென்னை கிண்டி அருகே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிறுநீரக  மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

செல்வராஜ்
இந்நிலையில், நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் நேற்று அதிகாலை 2.40 மணிக்கு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி   சித்தமல்லி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டு   அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
 செல்வராஜ்
அதன்படி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல்  திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது.   அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில்   21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!