அதிர்ச்சி... பெண்கள் மீது ஆண் காவலர்கள்... எடப்பாடி கண்டனம்!

 
ஸ்டாலின் இபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட விடியா திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்.


மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றி வருகிறது. அத்துடன் பெண்கள் மீது ஆண் போலீசார்   வன்முறையில் ஈடுபடுவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாது.  

 

தர்மபுரி
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து  வனத்துறை தரப்பில் நீதிமன்றம் மற்றும் மாவட்ட கலெக்டரின்  உத்தரவுப்படி  ஒகேனக்கல் வனப்பகுதியில் வசித்து வரும் 15 குடும்பத்தினரை வெளியேற்றியதாக விளக்கம் அளித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web