பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசாக உலகக் கோப்பை ஜெர்ஸியை அனுப்பிய மெஸ்ஸி!

 
மோடி


 
பிரதமர்  மோடியின் 75வது பிறந்தநாள் நாளை செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு, லியோனல் மெஸ்ஸி அவருக்கு தனது 2022 FIFA உலகக் கோப்பை ஜெர்ஸியை  கையொப்பமிட்டு பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளார். இந்த ஜெர்ஸி, அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றபோது மெஸ்ஸி அணிந்திருந்த பிரபலமான ஜெர்ஸி.  மெஸ்ஸி டிசம்பர் 13-15 வரை இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டு இருக்கும் நிலையில், இந்தப் பரிசு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.  


சுற்றுப்பயணத்தின் போது கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  மோடியுடன் சந்திப்பு ஏற்பாடு செய்ய முயற்சிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  விளையாட்டு விளம்பரதாரரான சதத்ரு தத்தா, ‘பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மெஸ்ஸி ஒரு ஜெர்சியை அனுப்பியுள்ளார். மெஸ்ஸி இந்தியா வரும்போது, ​​பிரதமரைச் சந்திக்க முயற்சிப்போம்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருகிறார். அவர் முதல் முறையாக டெல்லி மற்றும் மும்பைக்கு வருவார். டிசம்பர் 13ம் தேதி மெஸ்ஸி கொல்கத்தாவுக்கு வருவார். மறுநாள் மும்பையை அடைவார். டிசம்பர் 15 ம் தேதி டெல்லி  நிகழ்வில் கலந்து கொள்வார்.  மெஸ்ஸிக்கு தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருக்கு அஸ்ஸாம் தேநீர் கொடுத்தேன். இங்குள்ள தேநீரின் சிறப்பு குறித்து  நான் அவரிடம் சொன்னேன். மெஸ்ஸி நிச்சயமாக அதை ருசிப்பார் எனக் கூறினார்.  இந்திய உணவின் சிறப்புகள் மற்றும் மாறுபாடுகள் பற்றிய தகவல்களையும் அவருக்கு வழங்கினேன்” என தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?