அதிர்ச்சி!! 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா!!

 
மெட்டா

2020 டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. கொரோனா  ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு பெரும் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு செய்து வருகின்றன. டிவிட்டர், ஸ்விக்கி, மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.  

வாட்ஸ் அப்

அந்த வரிசையில்  பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின்  தாய் நிறுவனமான  மெட்டா நிறுவனம் நவம்பரில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.  அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் . மார்ச் மாத தொடக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து உயர் அதிகாரிகளிடம்  2வது கட்டமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில், மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையாக 5,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டா, ட்விட்டர்

 இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர். சுமார் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள்  பாதிக்கப்பட்டனர்.  இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்க்கெட்டிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உட்பட பல பிரிவுகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web