கொண்டாடுங்க... இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை !!

 
மெட்ரோ

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டியில் இன்று  நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த  போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயணப் போக்குவரத்து செலவினத் தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது.
அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.    அதாவது, இன்று இரவு 12.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மெட்ரோ ரயில்
மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினைப் பயன்படுத்தி எவ்வித கட்டணமுமின்றி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வாயிலில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பார்கோடு அவசியம். இதனால்   மெட்ரோ ரயிலில் பயணம் செய்யப்போகும் பயணிகள் போட்டி டிக்கெட்டை சேதம் அடையாமல் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  
நீலவழித்தடம்: பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம்

மெட்ரோ ரயில்


மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம்: புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மேலும்  இன்று இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக விமான நிலையம் மெட்ரோ செல்லும் ரயில் சேவை இயக்கப்படாது. உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள  மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web