போட்றா வெடிய... லியோ நள்ளிரவு 12 மணிக்கு திரையரங்குகளில் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
லியோ

இளையதளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19ம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பெரும் சர்ச்சைகளும், கட்டுப்பாடுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை நாளை காலை 9மணிக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லியோ


ஆனால், அதிகாலை 4 மணிக்கு படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தது. மேலும், இது குறித்து உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரமறுத்துவிட்டது.   காலை 7 மணிக்கு திரையிட அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கும் அரசு மறுப்பு தெரிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

லியோ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  லியோ முதல் காட்சி இன்று இரவு 12.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடைசி நேரம் வரை படம் எப்போது வெளியாகும் என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகள் லியோ படத்திற்கான முன்பதிவு இல்லை எனவும், லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளனர்.   ஆனால், அகமதாபாத்தில் நள்ளிரவு காட்சி வெளியாவது தமிழக ரசிகர்கள் பலருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web