பால் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு... இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!

 
பால்

 தேர்தல் முடிந்த கையுடன் சுங்கச்சாவடி கட்டணம் நாடு முழுவதும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணத்தை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என நடுத்தரவர்க்கத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  இந்நிலையில் அமுல் பால் விலையும் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் சார்ந்த கூட்டமைப்புகள் உள்ளூர், வெளி மாநிலங்களுக்கும்  பால் விற்பனையை மேற்கொள்கின்றனர்.

அமுல் பால்

தமிழகத்தை  பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமான பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.   அந்த வகையில், குஜராத் பால் உற்பத்தியாளர் சங்கத்தால் தயாரிக்கப்படும் அமுல் பால் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக 2023  பிப்ரவரி மாதம் பால் விலையை அமுல் நிறுவனம் உயர்த்தியது. தற்போது மீண்டும்  இன்று முதல் லிட்டருக்கு ரூ2  பால் விலையை அமுல் நிறுவனம் உயர்த்தியுள்ளது.அதன்படி அமுல் தாசா பால் விலை லிட்டர் ரூ 56க்கும்,  அமுல் கோல்ட் விலை லிட்டர் ரூ68க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web