படம் தயாரிப்பதாக பல லட்சம் அபேஸ்.. தலைமறைவாகி இருந்த தயாரிப்பாளர் அதிரடியாக கைது!

 
ஜானி தாமஸ்

கேரளாவை சேர்ந்த ஜானி தாமஸ் என்பவர் ஜானி சாகரிகா என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறார். இவர் பல்வேறு படங்களுக்கு விநியோகஸ்தர் மற்றும் நிதியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கத்தாரில் பணியாற்றி வந்த கோவை வடவள்ளியை சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவருக்கும் ஜானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

5 படங்கள் தயாரிப்பதாகவும், புதிய படங்களில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் துவாரக்கிடம்  ஜானி தாமஸ் மற்றும் அவரது மகன் உறுதி அளித்துள்ளனர். இதன்பிறகு முதற்கட்டமாக 75 லட்சம் ரூபாயை துவாரக் முதலீடு செய்துள்ளார். இதை அடிப்படையாக வைத்து ஜானி தாமஸ் ‘நான்சென்ஸ்’ என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்து, இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை ஜானிக்கு கொடுத்துள்ளார் துவாரக். பின்னர், அவர்கள் 2018 இல் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஜானியும் அவரது மகன் ரான் ஜானியும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறினர், ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் லாபமாக ரூ.50 லட்சம் மட்டுமே கோரினர்.

மீதி பணத்தை கேட்டபோது தாமதமானதால், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜானியும், அவரது மகன் ரான் ஜானியும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஜானி தாமஸை கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில் கொச்சி போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தகவல் அறிந்ததும் கோவை போலீசார் ஜானி தாமஸை நேற்று கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web