படகு கடலில் கவிழ்ந்து 6 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி... 140 பேர் மாயம்!

 
படகு


 
ஏமன் நாட்டில் கடற்கரை அருகே 250 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்தது. இந்தப் படகு சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து  ஏடன் வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது. ஏமன் கடற்கரை அருகே வந்தபோது படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து உடனடியாக விரைந்து சென்ற  மீட்புக் குழுவினர், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

படகு
இருந்தபோதிலும்  இந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 71 பேர் இதுவரை  உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 140 பேர் மாயமாகினர். இவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக  ஐ.நா.வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web