சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ்... மே 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!

 
மினிமம் பேலன்ஸ்
 

இந்தியா முழுவதும்  வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான மினிமம் பேலன்ஸ் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி வருமான, வரி பிஎஃப் மட்டும் இல்லாமல் UPI பரிவர்த்தனை, சிறு சேமிப்பு திட்டங்கள், கிரெடிட் கார்டு பயன்பாடு, வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது என வங்கி சார்ந்த நடவடிக்கைகளில்  விரைவில் பல புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது.  

யெஸ் பேங்க் YES வங்கி

ஏற்கனவே ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்ற வங்கிகளில்  கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து  மற்ற வங்கிகளும் New Minimum Balance விதிகளை  மே 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. 

வங்கி


இது குறித்து  Yes Bank  ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ50,000 மினிமம் பேலன்சாக வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் ரூ1000 வரை  அபராதம் விதிக்கப்படும். அதேபோல எஸ் ப்ரோ ப்ளஸ் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ25000 மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். 
அல்லது அவர்களுக்கு ரூ750 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல எஸ் பேங்க் வாடிக்கையாளர்களை பொருத்தவரை "கிசான் சேமிப்பு கணக்கு" வைத்திருப்பவர்கள் ரூ5000ஐ   குறைந்தபட்ச இருப்புத் தொகையாக  வைத்திருக்க வேண்டும். தவறுபவர்களுக்கு ரூ500 வரை  அபராதம் விதிக்கப்படும். விரைவில் மற்ற வங்கிகளிலும் இவை அமல்படுத்தப்படும்.  அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web