அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பட்டாசு ஆலைகளுக்கு கடும் எச்சரிக்கை !

 
கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்

 சிவகாசியில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடமே இடிந்து தரைமட்டமாகியது. இதில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் முதல்வர் இரங்கல் பதிவு மட்டும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்  செய்தியாளர்களிடம் சிவகாசியில் தற்போது நிகழ்ந்துள்ள பட்டாசு ஆலை வெடி விபத்திற்குப் பேராசைதான் காரணம் . “பட்டாசு ஆலைகளின் நிர்வாகங்கள் பேராசை காரணமாக விதிமுறைகளை  சரியாக பின்பற்றுவதில்லை. அதனால்தான் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்கின்றன.

பட்டாசு ஆலை
“தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு அடுத்த இரு நாள்களில் விபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீடுகள் அறிவிக்கப்படும். “ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்,” எனக் கூறியுள்ளார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.  முன்னதாக, விபத்தில் உயிரிழந்தோருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, ஆலை உரிமையாளர் தரப்பு ரூ.10 லட்சமும்  இறுதிச்சடங்கு செலவுக்காக ரொக்கத் தொகையாக ரூ 50,000 ம் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  இதன்படி உரிமையாளர் தலா ரூ5 லட்சம் காசோலையும், உடனடி ரொக்கத் தொகையாக ரூ50000 வழங்கியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web