அமைச்சர் நேருவின் சொந்த ஊரில் சாரயக்கடை சந்து.. எம்.எல்.ஏ.வும் கண்டுக்கலை.. இனிமேலாவது நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்!?

 
சாராயக்கடை சந்து

சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக், செந்தில் பாலாஜி இவை தான் தமிழகத்தில் தற்பொழுதைய பேசு பொருள் விவகாரம். தமிழகத்தில் விழுப்புரம், மரக்காணம்,  தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடந்த கள்ளச்சாராய மரணம் தற்போது பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மேலும் பரபரப்பாக உள்ளது. எதிர்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளே குழப்பதில் ஆழ்ந்து கிடக்கிறது. இரண்டாண்டை சாதனை என்பதா? வேதனை என்பதா? தலைவர் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி தடபுடலாக கொண்டாடுவதா? மக்களை எப்படி சந்திப்பது? என மில்லியன் டாலர் கேள்விகள் மந்திரிகளின் மண்டையைப் பிளந்து கொண்டிருக்க இந்த விஷயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சரி சரி சற்றே ரிலாக்ஸ் மூடிற்கு போவோமா...? திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20ல் சாராயக்கடை சந்து என்ற பெயரில் தெருவே  உள்ளது. இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டில் இருப்பது தான் வேதனையான விஷயம். தற்போதைய சூழ்நிலையில் கள்ளச்சாராயம் மற்றும் அரசு மதுபானம் குறித்த பரபரப்பான சூழ்நிலையில் சாராயக்கடை சந்து என்ற பெயர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேரு

இதை அறிந்த நகராட்சி நிர்வாகம் இந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்தக் காலத்தில் தோப்பாக இருந்த பொழுது அங்கே சாராயக்கடை இருந்ததாகவும், அதனால் அந்த தெருவிற்கு அப்படி ஒரு பெயரை வைத்து அழைத்ததாகவும் சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஆனால் இப்பொழுது தெருவில் அப்படி எதுவும் டாஸ்மாக் கடைகள் கிடையாது. குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது.

கூடுதல் தகவலாக இந்த தொகுதியில் தான் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்த ஊரான கானக்கிளிய நல்லூர் வருகிறது, மேலும் இங்கே தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவைச் சார்ந்த செளந்திரபாண்டியன்.  இவராவது இதனை அகற்ற முயற்ச்சி எடுத்திருக்கலாம் என்று புலம்புகிறார்கள் உள்ளூர்வாசிகள். இது குறித்து எம்.எல்.ஏ.விடம் எத்தனையோ முறை மனு கொடுத்தாயிற்று என்று புலம்புகிறார்கள். 

லால்குடி ஜெயராமன்

பிரபல வயலின் இசைக்கலைஞர் லால்குடி ஜெயராமன் பெயரை சூட்டியிருக்கலாம் அல்லது இருக்கவே இருக்கிறார் திருவள்ளுவர்.. அதுவும் வேண்டாம்னு நினைக்கறீங்களா அன்பில் தர்மலிங்கம் பெயரையாவது சூட்டி மகிழலாமே என்று புலம்புகிறார்கள். யாருக்காவது விலாசம் சொல்றதாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்புகளுக்கு முயற்சிக்கும் போதும் சரி... இத்தனை வருஷமா இந்த தெரு பெயரால் எங்களுக்கு சங்கடம் தான் என்கிறார்கள் தெருவில் வசிப்பவர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web