அடுத்த பதவி பறிப்பு லிஸ்ட்ல அமைச்சர் பொன்முடி பேரு?! மீண்டும் சர்ச்சையில் சிக்கி பிதற்றல் பேச்சு!

 
பொன்முடி

பிரிக்க முடியாதது எதுவோ எனக் கேட்டால் பொன்முடியும் சர்ச்சை பேச்சும் என சரியாக சொல்லி விடலாம் போல. பொது இடங்களிலும் அமைச்சர் பொன்முடி, 'வாயை விட்டு' சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். திருக்கோவிலுாரில் நடந்த விழாவின் போது அந்த கிராம மக்களிடம் பொன்முடி, “நீங்கள் திமுகவுக்கா ஓட்டு போட்டீங்க, அப்படியே ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க” என்று கேட்டு சர்ச்சையில் சிக்கினார். 

அதே பாணியில் விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் வழங்கி விட்டு காரில் கிளம்பினார்கள். 

பொன்முடி

அப்போது ஒரு இளைஞர், அமைச்சர்களைப் பார்த்து, "நீங்கள் 5 முறையும் (பொன்முடி), நீங்க 3 முறையும் (மஸ்தான்) அமைச்சராக இருந்துள்ளீர்கள். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையாக மரக்காணம் உள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எக்ஸ்ரே வசதி கூட இல்லை. ஏதாவது அவசரம் என்றால் 40, 50 கி.மீ. தூரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மரக்காணம் ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தியிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது" என்று கேட்டார்.

காரில் இருந்தபடி இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி, 'நீ திமுகவுக்கு ஓட்டு போட்டியா?" என்றார். உடனே கார் கிளம்பியது. இளைஞர்களை அமைச்சர் மஸ்தான் சமாதானப்படுத்தி விட்டு, அவரும் காரில் கிளம்பிச் சென்றார்.

அரசு விழாக்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் அமைச்சர் பொன்முடிக்கு இது புதிதல்ல. ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசிய பெண்மணியை ஓசி... ஓசி டிக்கெட் எனப்  பேசி வசமாக ட்ரோல் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் தனியே அழைத்து டோஸ் விட்டதாக எல்லாம் செய்தி பரவியது. அதன் பின்னர், கொஞ்ச நாளைக்கு வாயை மூடிக் கொண்டிருந்தவர் மீண்டும் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

பொன்முடி

இது குறித்து தமிழ்நாடு தன்னுரிமைக்கழகத்தின் நிறுவனர் பழ. கருப்பையா கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார். ஓசி பஸ்ஸில் போறீயான்னு கேட்டார்.. இவருடைய புத்தி இவரது தரத்தை காட்டுகிறது. எப்பொழுதும் இப்படித் தான் மக்கள் வரிப்பணத்தில் காரில் பயணம் செய்யும் நீ மக்களை குறை சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உங்க அப்பன் வீட்டு சொத்திலா போகிறோம்?  நீ எல்லாம் பேராசிரியரா எனக் கடுமையாக சாடியிருக்கிறார். இது முதல் முறை கிடையாது.. தொகுதிக்குள் பொது நிகழ்ச்சி மேடையில்,  அநாகரிக பேச்சு, கிராம சபை கூட்டத்தில், கோரிக்கை வைத்த பெண்மணியைப் பார்த்து, ‘நீ வாயை மூடு’ என  ஒருமையில் கத்தியது, இன்னொரு பொது மேடையில் அரசு ஊழியரைப் பார்த்து, ‘நீ எஸ்.சி., தானே’ என கேட்டது... என்று  அடுத்தடுத்து பொன்முடி  மீது புகார்கள். இதே கதையைத் தொடர்ந்தால், பொன்முடி விரைவில் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று அறிவாலய வளாகத்தில் பேச்சு அடிபடுகிறது. 

அமைச்சரே ஓட்டு போட்டவருக்கு மட்டுமே நீங்கள் அமைச்சர் அல்ல... தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீங்கள் தான் மந்திரி என்பதை நினைவில் கொள்ளுங்கள் இல்லை என்றால் கூடிய விரைவில் எந்திரி என புறக்கணித்துவிடுவார்கள் மக்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web