அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

 
பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூந்துறை கிராமத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் செம்மண் குவாரி நடந்த வழக்கில் அரசுக்கு ரூ. 28.31 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அமைச்சர் பொன்முடி தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அவரது ரூ.14.21 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!