அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 நாட்களில் அறுவை சிகிச்சை!!

 
செந்தில் பாலாஜி

தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு   அடுத்த 2 அல்லது 3 நாட்களில்  அறுவை சிகிச்சை செய்யப்படும்  மருத்துவர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   எய்ம்ஸ் மருத்துவர்களும் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2011-2016 ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு இதயத்தின் ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டிறிந்த மருத்துவர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Medical Report

ஆஞ்சியோ பரிசோதனை தொடர்பாக, மருத்துவமனை சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மின்சாரதுறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று அதாவது ஜூன் 14ம் தேதி காலை 10.40 மணியளவில் ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் முக்கியமான ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை - பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜூன் 28 வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கிய 3 நாளில் அடைப்புக்கள் உள்ளதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு  மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி அளித்ததன் அடிப்படையில் அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web