போலீஸ்காரருக்கு சராமாரி டோஸ் விட்ட அமைச்சர் மனைவி… அதிர்ச்சி வீடியோ!

 
ஹரிதா


 
ஆந்திர மாநிலத்தில்  தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று   சந்திரபாபு நாயுடு முதல்வராக  பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு துணை முதல்வராக  பவன் கல்யாண் பொறுப்பேற்றுள்ளார்.  மேலும் சந்திரபாபு நாயுடு  அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சராக இருக்கிறார்.

இவருடைய மனைவி ஹரிதா ரெட்டி. இவர் ஒரு நிகழ்ச்சிக்காக காரில் வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில்  போலீஸ்காரர் ஒருவர் அவரை காத்திருக்க வைத்ததாக தெரிகிறது.ஆத்திரம் அடைந்த ஹரிதா ரெட்டி அவரை பொதுஇடம் என்றும் பாராமல் சராமாரியாக விமர்சித்துள்ளார்.  இன்னும் காலை ஆகவில்லையா.? இது என்ன கான்பிரன்ஸ். இப்ப கல்யாணத்துக்கு வந்திருக்கியா.? இல்லன்னா ட்யூட்டிக்கு வந்திருக்கியா.? உங்களுக்காக அரைமணி நேரம் நான் காத்திருந்தேன். உங்களுக்கெல்லாம் யார் சம்பளம் தருவது.? அரசாங்கமா இல்லனா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியா என அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுக்கிறார்.

அந்த வீடியோவில் சப் இன்ஸ்பெக்டர்  அமைச்சரின் மனைவிக்கு சல்யூட் அடித்து காரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமா? என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web