அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி.. !!

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டது. பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.   அடுத்தடுத்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை  நவம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையிலேயே தகுந்த  சிகிச்சை அளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி

ஆனால் பலன் கிடைக்காததால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஏற்கனவே  கடந்த 3 நாட்களாகவே செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு  அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி  வீல்சேர் மூலம் மருத்துவமனைக்கு  உள்ளே கொண்டு செல்லப்பட்டார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web