4,000 வருட பழமையான கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு... சென்னானூர் அகழாய்வு பணியில் அதிசயம்!

இதனிடையே, இப்பணி தொடர்பாக தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது:கடந்த 6 நாட்களாக சென்னானூரில் அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதில், பி2 என்ற அகழாய்வுக் குழியில் 53 செ.மீ ஆழத்தில் உடைந்த நிலையில் புதிய கற்கால வெட்டுக்கருவி கிடைத்துள்ளது. இக்கருவி 6 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் உள்ளது. இக்கருவி 4,000 ஆண்டு பழமையானது.புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது.

அப்போது, 30 முதல் 25 செ.மீ நீளமுள்ள கற்கருவியைத்தான் விவசாய பணிக்குப் பயன்படுத்தினர். தற்போது, கண்டறியப்பட்டுள்ள இக்கருவி சிறியது என்பதால் மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும், கோடாரியைப்போல பயன்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
