2 நாட்களில் 22000 பேர்... விடுமுறை நாளில் கண்ணாடி பாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

 
கண்ணாடி பாலம்
 

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டுள்ளனர். ரூ.37 கோடி செலவில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்ததிலிருந்து சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.

கண்ணாடி இழை பாலம்

திருவள்ளுவர் சிலை மற்றும் கடற்கரையை ஒரே பார்வையில் ரசிக்கலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பாலத்தில் நடந்து சென்று காட்சியை கண்டு மகிழ்ந்தனர். பலரும் கண்ணாடி பாலத்தில் செல்பி எடுத்து நினைவாகப் பதிவுசெய்தனர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலேயே பயணிகள் வருகை பெருமளவில் அதிகரித்தது.

கண்ணாடி பாலம்

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 22,892 சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி பாலத்துக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.30.4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் இந்த பாலம் தற்போது சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய அடையாளமாக திகழ்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!