2 நாட்களில் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புகிறார்... அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை.!

 
ஸ்டாலின்


தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின்  சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவர் இயல்பாக இருப்பதாக  வழக்கமான பணிகளை இரு நாட்களில் மேற்கொள்ள இருப்பதாக   மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், ”முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை குறித்து க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டு இருப்பதாக  கண்டறியப்பட்டது.

ஸ்டாலின்
இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலுவின்  தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.  இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதல்வர்  நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?