உறைய வைக்கும் வீடியோ... இளம்பெண்ணை தடியால் அடித்து துவம்சம் செய்யும் எம்.எல்.ஏ . ஆதரவாளர்கள்!

 
மேற்கு வங்காளம்

 மேற்கு வங்க மாநிலத்தில்  கமர்ஹத்தியில் இளம்பெண் ஒருவரை தடியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பெண்ணை 2 ஆண்கள் தடியால் தாக்குதல் நடத்துகின்றனர்.  அத்துடன் அவரத் இரு கைகளையும், கால்களையும் 2 ஆண்கள்  தரையில் இருந்து தூக்கி பிடித்துக்கொண்டனர்.  

குண்டர்கள் கொடூரமாக ஒன்றன் பின் ஒன்றாக அடித்துக் கொண்டே இருந்தததால், வீடியோவில் உள்ள ஆதரவற்ற பெண் உதவி கோரி கதறி கூச்சலிடுகிறார். அத்துடன் வலி தாங்க முடியாமல் அவள் உடலை பிடித்து இழுக்கிறாள்.  அவளைப் பிடித்திருந்த குண்டர்கள் அவளை விட மறுத்துவிட்டனர். மேலும் அந்த வீடியோவில் "TMC எம்.எல்.ஏ மதன் மித்ராவின் நெருங்கிய கூட்டாளியான ஜெயந்தா சிங்,  ஒரு பெண்ணை தனது கும்பலுடன் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக அடிக்கிறார்! இவர் அப்பகுதியில் 'சுபாரி' எடுப்பதில் பெயர் பெற்றவர். இவர் மம்தாவின் அடியாள் என பாஜக சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  


உத்தர தினாஜ்பூரில் உள்ள சோப்ராவில்  திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) உள்ளூரில் இவர் பலம் பொருந்தியவர்.  'ஜேசிபி' என அழைக்கப்படும் தஜ்முல் ஹக், ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் திறந்த வெளியில் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதும் சரமாரியாக அடித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதிர்ச்சியூட்டும் வகையில், கூட்டத்தில் இருந்து சிலர் பாதிக்கப்பட்டவர்களை அடிப்பதில் அவர்களும் பங்கெடுத்துக் கொண்டனர்.   TMC உள்ளூர் வலிமையான தஜ்முல் ஹக் அலியாஸ் 'ஜேசிபி' சோப்ராவில் பொதுமக்கள் முன்னிலையில்  வெளிப்படையாக பெண்ணை கசையடி கொடுத்தது பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் இந்த வீடியோவில் பெண்ணை அடித்த  உள்ளூர் TMC தஜ்முல் ஹக்   கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web