தீவிர புயலாக வலுவடைந்தது ‘மோக்கா’.. 15ம் தேதி வரை மழை நீடிக்கும்!

 
புயல்

நேற்று காலை வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல், நேற்று  மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக மாறி  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புயல்

மோக்கா புயல் மே 14ம் தேதி முற்பகலில், தென்கிழக்கு வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வங்காளவிரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 15ம் தேதி வரையில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை நீடிக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல்

மோக்கா புயல் கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு 11கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்றும், வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web