இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இருந்தும் வெயில் குறைந்தபாடில்லை.  வழக்கத்தை விட அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள்  காலை 10மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சதமடித்தது. அதே நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் கொடுத்து வருகிறது.

5 மாவட்டங்களில் கன மழை

நேற்று, கடலூர், மயிலாடுதுறை, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது.  அதே போல் இன்றும் நாளையும்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மழை
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலையில் மலை பெய்தாலும் பகலில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயிலின் தாக்கம் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web