அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை!! குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

 தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சட்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இடையில் பெய்த கோடை மழையால் சில நாட்கல் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம்ம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன மழை


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக இருக்கும்.   நாளை மே26 முதல் மே 28 வரை தமிழகத்தின் கடலோர பகுதிகள்,  மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனையடுத்து மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web