காலையில் இன்ப அதிர்ச்சி... சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை... 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை

இன்று காலை முதலே  சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உட்பட   பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  
 மழை
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web