அடுத்த 5 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை

 தெற்கு கேரளா  பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இன்று மே 10ம் தேதி தமிழகம், புதுவை காரைககல்  பகுதிகளில் இடி மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி ஈரோடு, சேலம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 11ம் தேதி தமிழகம், புதுவை , காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

வெயில் பெண்கள்

நீலகிரி, கோவை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 12 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல், புயல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை,  தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

வெயில் , மழை
 மே 13ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை,  ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மே 14 மற்றும் 15 தேதிகளில்  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web