கத்திரி வெயில்ல இருந்து ஒரு பிரேக்... 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
இடி மின்னல் மழை

  தமிழகத்தில் நேற்று மே 8ம் தேதி பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. அடுத்த 7நாட்களுக்கு வெப்ப அலை அலெர்ட் கிடையாது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனால் சற்றே உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று இன்னும் சற்று நேரத்தில்  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துபாய் மழை

சென்னையை பொறுத்தவரை நேற்று நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து  பல பகுதிகளில் லேசான மேகமூட்டம் காணப்பட்டது.  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மழை

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி , திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு தர்மபுரி , சேலம், நாமக்கல் , நீலகிரி, கோவை , திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல் , சிவகங்கை , நெல்லை , தூத்துக்குடி , கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web