விடுமுறை தினத்தில் குஷி... அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தில் கத்தரி வெயில் கொளுத்தி வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை கிடையாது என வெதர்மேனும் , இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது.  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி  என 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web