சட்டென மாறிய வானிலை... சென்னையில் பல பகுதிகளில் மழை!

 
இடி மின்னல் மழை

 சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து  வருகிறது. குறிப்பாக, இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.  இந்நிலையில், சென்னையில் இன்று மாலை சட்டென்று வானிலை மாறியது. இதனையடுத்து நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மழை

குறிப்பாக  எழும்பூர், சென்னை சென்ட்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, பல்லாவரம், கிண்டி, அம்பத்தூர், கொரட்டூர், கீழ்கட்டளை, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உட்பட நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாறியுள்ளதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web